Categories
தேசிய செய்திகள்

ஆயுதப்படை சட்டம் டிசம்பர் 31-வரை நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான  நாகலாந்து முழுவதும் பதற்றமான பகுதி என அறிவித்து, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அமல்படுத்தியது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த உத்தரவு 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இன்றுடன் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நிறைவு பெறுவதால் மேலும் 6 மாதங்களுக்கு நாகாலாந்தை பதற்றமான பகுதி என அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் நாகாலாந்து முழுவதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புபடை வீரர்கள் பணியில் இருப்பர். இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதியில் யார் மேலாவது சந்தேகம் ஏற்பட்டால், அவரை முன்னறிவிப்பு இன்றியும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமலும் விசாரிக்கவும், சோதனை செய்யவும், கைது செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |