Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜைக்கு திரையரங்கு திறப்பு… அனுமதி வேண்டி கோரிக்கை… முதலமைச்சர் முடிவு என்ன?…

தமிழகத்தில் வரும் ஆயுத பூஜை அன்று திரையரங்குகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ள எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து முதலமைச்சர் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினர்.

அதன்பிறகு, வருகின்ற 25 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென முதலமைச்சரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளனர்.

Categories

Tech |