Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு…. “சென்னையிலிருந்து திருப்பத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்”….!!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருப்பத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

ஆயுத பூஜை முன்னிட்டு சென்னையில் இருக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதனால் வருகின்ற 30ஆம் தேதி மற்றும் -ஆம் தேதி உள்ளிட்ட இரு தினங்களுக்கு சென்னையிலிருந்து வேலூர் மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் இருந்து இயக்கப்பட இருக்கின்றது.

மேலும் பூந்தமல்லியிலிருந்து வேலூருக்கு 30 பேருந்துகள், ஆற்காட்டுக்கு 15 பேருந்துகள், திருப்பத்தூருக்கு 30 பேருந்துகள், குடியாத்தத்திற்கு 20 பேருந்துகள், ஓசூருக்கு 30 பேருந்துகள், தர்மபுரிக்கு 25 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றது. இதுபோல பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |