Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு…. தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…. எவ்வளவுன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். அதற்கு பூக்கள் அலங்காரம் மிக முக்கிய அங்கம் வகிக்கும். ஆனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சந்தைகளில் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரு கிலோ தற்போது 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பிச்சிப்பூ 400 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் செவ்வந்தி 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 80 ரூபாயிலிருந்து 280 ரூபாய்க்கும், ஜாதிப்பூ 200 ரூபாயிலிருந்து 450 ரூபாய்க்கு, முல்லைப்பூ 250 ரூபாயிலிருந்து 600 ரூபாய்க்கும், தாமரைப் பூவின் விலை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இதனைத் தவிர மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |