Categories
மாநில செய்திகள்

ஆய்வக உதவியாளர் இடம் நிரப்ப…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

பள்ளிக்கல்வி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. அவர்களுக்கான செய்முறை தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகளை எந்த பிரச்சினையுமின்றி நடத்தும் வகையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. மாற்றுப் பணியில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றி பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு ஏற்பாடுகளில் ஈடுபடுத்த  அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |