இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆய்வர் பணியிடங்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ.29ம் தேதி காலை 11மணியளவில் இணையவழியாக கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு தொடர்பான முழு விவரங்கள் http://hrnc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இணையவழி கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் நபர்கள் தாங்கள் பணியாற்றும் இணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் அலுவலக மின்னஞ்சல் முகவரியிலிருந்து மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.