மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கண்மாயில் அனுமதியின்றி மீன் பிடித்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவில் செல்வக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி வலை போட்டு மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார். இந்த கண்மாய் வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் அப்பகுதியில் வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அனுமதியின்றி கண்மாயில் மீன் பிடித்து கொண்டிருந்த செல்வகுமாரை மடக்கி பிடித்து போடி தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து செல்வகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10கிலோ மீனையும் பறிமுதல் செய்துள்ளனர்.