Categories
மாநில செய்திகள்

ஆய்வாளரை கழுத்தை அறுத்த நபருக்கு மாவுக்கட்டு…. போலீஸ் தகவல்…..!!!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி அருகில் பழவூர் எனும் இடத்தில் அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல்உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உட்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். இதையடுத்து கோவில் கொடைவிழா முடிந்த பின் அங்கு வைக்கட்டிருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும்போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு வாதத்தின்போது ஆறுமுகம் திடீரென்று  காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை  சககாவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
முன்பே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைப்பதிவு செய்தது எஸ்.ஐ மார்க்கரேட் திரேஷாதான் என கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆறுமுகம் அவரை கத்தியால் குத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன்பின் ஆறுமுகத்தை பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளரை, நெல்லை சரக டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் கழுத்தை அறுத்த ஆறுமுகம் என்பவர் கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் கை முறிந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பின், அவர்கள் வழுக்கி விழுந்து கை, கால்களில் மாவுக்கட்டு போடுவது வழக்கமாகும். அப்படி ஒரு சம்பவம் தான் இன்றும் நடந்துள்ளது.

Categories

Tech |