சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பயன்படுத்திய கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிபிசிஐ காவலில் எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவலில் எடுக்க சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்யவில்லை என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் நேற்று உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் ராஜாராம், மணிமாறன், ரவிசங்கர் என ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் சில முக்கிய தகவல்களை சொல்லி இருக்கின்றார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்ட போது அவர் ஒட்டிச் சென்ற கார் பிடிபட்டது. காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பயன்படுத்திய கார் அவருடையது அல்ல என்றும், அது தன்னுடையது என்று சென்னையில் இருந்து ஒருவர் வந்துள்ளார். 2017ஆம் ஆண்டு அடமானம் வைத்த தன்னுடைய காரை நான் தற்போது தொலைக்காட்சி மூலமாக தெரிந்துகொண்டேன் என்று சுரேஷ்குமார் சென்னையில் இருந்து வந்திருக்கிறார்.
அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றார்கள். பிடிபட்ட கார் குறித்த ஆவணங்கள் அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்.குற்ற பின்னணி கொண்ட இந்த காரை எப்படி பயன்படுத்தினார் ? என்ற அடிப்படையில் விசாரணை நடைபெறுகின்றது. அதே போல பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று சொல்லக்கூடிய நண்பர்கள் குழுவினரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.