Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆய்வு செய்வதற்காக காரில் சென்ற ஆட்சியர்…. “சாலையோரமாக முட்டை கழிவுகளை கொட்டி கொண்டிருந்த மினி லாரி”…. அபராதம் விதித்து எச்சரிக்கை….!!!!!

சாலையோரமாக முட்டைக் கழிவுகளை கொட்டியதற்காக மினி லாரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே மினி லாரி ஒன்று முட்டை கழிவுகளை சாலையோரம் கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்த ஆட்சியர் அவற்றை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துப்புரவு அலுவலர் சுப்ரமணியன், துப்புரவு ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் மினி லாரி உரிமையாளர் ராஜாவுக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்தார்கள். பின் லாரி உரிமையாளர் அபராதத்தை செலுத்திய பிறகு மினி லாரியை அதிகாரிகள் விடுவித்தார்கள். மேலும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மினி லாரி உரிமையாளரை அதிகாரிகள் எச்சரித்தார்கள்.

Categories

Tech |