ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்தினால் மிகவும் நல்லது.
ஆரஞ்சு பழத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதைவிட ஒருபடி அதிக நன்மை ஆரஞ்சு பழத்தின் விதைகளில் உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது அதன் விதையை சேர்த்து சாப்பிட்டால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தின் விதைகள் சிறந்த மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இதனால் அதை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி உண்டாகிறது. ஆரஞ்சு பழம் சாப்பிடும் போது, அதன் சாற்றை பிழிந்து எடுக்கும் போது அதன் விதைகளை அகற்றாமல் அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.
இந்த விதைகள் உடல் சோர்வை போக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவும் இந்த விதைகளில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் ஏற்படும் நச்சுத் தன்மையை சரிசெய்யும். இந்த விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. முடியின் வலிமையை அதிகரிப்பதோடு முடி வளர்ச்சியை அதிகரிக்கும். இது தலையில் இரத்த ஓட்டம் சீராக்க உதவுகிறது.