Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆரணி அரசு மருத்துவமனையில் மக்கள் பயன்பாட்டுக்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம்”….. திருப்பி அனுப்ப முடிவு…!!!!!

ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அரசு மருத்துவமனையில் 150 க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆரணி சுற்றி இருக்கும் போளூர், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா பகுதியில் உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றார்கள். இங்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலை இ சேவை மையம் மூலமாக பல லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அதை இன்று வரை பொருத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்படாமல் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது. இந்த ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம் பயன்பாட்டிற்கு வந்தால் அனைத்து பகுதிகளுக்குமே ஆக்சிஜன் குழாய் இணைப்பு மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு பயனடைவார்கள்.

இந்த நிலையில் இதுப்பற்றி மருத்துவ அலுவலர் மமதா கூறியுள்ளதாவது, ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம் மட்டும் வழங்கினார்கள். அதை பொருத்த நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கான நிதி எங்களிடம் இல்லை. அதனால் சம்பந்தப்பட்டவரிடம் கேட்டிருக்கின்றோம். அவர்கள் நிதி தரவில்லை என்றால் கொடுத்தவர்களிடம் திருப்பி அனுப்ப முடிவு செய்து அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டிருக்கின்றது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |