ஆரணி அருகே குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அருகே இருக்கும் பூசிமலைகுப்பம் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீரை குடித்த பூபதின், ரித்தீஷ், கோபிகா, ஆர்.தர்ஷன், தர்ஷன், சுஷ்மிதா, காயத்ரி, பூவரசன் உள்ளிட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
இது போலவே காமக்கூர்பாளையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட வெற்றிச்செல்வன், கோபாலகிருஷ்ணன், சுவாதி, கயல்விழி உள்ளிட்டோர் மயக்கம் அடைந்தார்கள். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தற்பொழுது இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருக்கின்றார்கள்.