Categories
மாநில செய்திகள்

ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. ஆட்சியர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து 900 கன அடி நீர் திறக்கப்படுவதால் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், பெரியபாளையம், ஆரணி, புதுவயல் மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |