Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆரம்பத்திலேயே கண்டறியனும்…. “போதை பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்க”…. ஆசிரியர்களுக்கு பயிற்சி..!!

பொள்ளாச்சியில் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்களுக்கு சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டன. மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறை “போசோ” என்கிற பயிற்சியில் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சண்முகம், மகாலட்சுமி கருத்தாளராககவும், ஆசிரியர் பயிற்றுனராக ஹேமலதா, வெங்கட்ரமணன் ஆகியோர் பயிற்சி கொடுத்தனர்.

மேலும் இது குறித்து கல்வி அதிகாரி பேசியதாவது, போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவ மாணவிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இதற்காக பள்ளியில் குழு அமைத்து வட்டார அளவில் பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியர் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதையடுத்து வட்டார அளவில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் கொடுக்கப்படும். இதை அடுத்து “வளரினம் பருவத்தினருக்கு நல்வழி காட்டுவோம்” என்ற தலைப்பில் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த கையேட்டில் எப்படி போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்றும், வளரும் பருவத்தை புரிந்து கொள்வது, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள், மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்விற்கான வாழ்க்கை திறனை மேம்படுத்துவது குறித்து அனைத்தும் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |