கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து பொது தேர்வுகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு 2022 – 23 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதனைஅடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத அனைத்து பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் வயது 5 வருடங்கள் மற்றும் 5 மாதங்களில் இருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது. இந்த விதி வரும் கால்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவில் தொடக்கப்பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அந்த கல்வியாண்டின் ஜூன் ஒன்றாம் தேதியின்படி ஆறு வயது இருக்க வேண்டும்.
இருப்பினும் முன் தொடக்கப் பள்ளிகளுக்கான கட் ஆப் வயது பற்றி உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் சில ஆர்வலர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே முன் தொடக்க வகுப்புகள் இருப்பதால் சேர்க்கை வயது அதிகரிப்பது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் நோக்கி தள்ளப்படும் என பயந்து வருகின்றனர். மேலும் வளர்ச்சி கல்வியாளர் நிரஞ்சனாராத்யா வி.பி.தி இந்து பேசும்போது, அரசு பள்ளிகளில் முன் தொடக்க வகுப்புகள் இல்லாத நிலையில் இது போன்ற விதிகள் அத்தகைய பள்ளிகளின் வலிமையை மேலும் குறைய செய்யும். அதனால் அரசு பள்ளிகளில் சேர்க்கைக்கான வயது 5ஆக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்