Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆரம்பமான ஆடி மாசம்…… ஜெகஜோதியாக தேங்காய் சுட்டு வரவேற்ற மக்கள்…..!!!!

ஆடி மாதம் முதல் நாளான இன்று காலை முதல் சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. புதிய தேங்காய் எடுத்து அதன் மேல் உள்ள நாறுகளை அகற்றி தேங்காயில் ஒரு கண்ணில் துளையிட்டு, தேங்காய் தண்ணீரை வெளியேற்றி துளையிட்ட கண்களின் வழியாக தேங்காய் கொல் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவுல், ஏலக்காய் போன்றவற்றை கலந்து பின்னர் ஒரு நீண்ட ஒரு முனை கூறாக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகினர்.

பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடிவிட்டு வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பை மூட்டி அந்த நெருப்பில் குச்சியை சொருகி தேங்காயை சுட்டனர். பின்னர் அந்த தேங்காயை சாமிக்கு படைத்து பூஜை செய்துவிட்டு வழிபட்டனர். தமிழகத்தில் சேலத்தில் மட்டுமே தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படும் என்பது மிக தனிச்சிறப்பாகும்.

Categories

Tech |