Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆரம்பிக்கலாங்களா?’… ‘விக்ரம்’ படத்திற்கு தயாரான லோகேஷ்- கமல்… வைரலாகும் புகைப்படம்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணியில் பிஸியாக இருந்ததால் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. நேற்றுடன் தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் சமீபத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘ஆரம்பிக்கலாங்களா?’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |