லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Vikram first look from tomorrow evening at 5pm 💪#Vikram #arambichitom
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 9, 2021
மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.