ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது வழங்கப்படாத ஊழியர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
அதன்பிறகு சம்பளத்தில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஷேக் முஜிபர் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.