தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூகவலைத்தள பக்கத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தான் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸில் டைட்டில் வின்னராக ரியோ, ஆரி, பாலாஜி ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிக்பாஸில் பங்கேற்றுள்ள ஆரியை பற்றி பதிவிட்டுள்ளார் . அதில்,’ஆரி தான் டைட்டில் வின்னர். அது வேறு விஷயம் . ஆனால் இவர் எல்லா திசைகளிலிருந்தும் வரும் பகையை எவ்வாறு நிர்வகிக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .
எல்லாரும் உங்களை வெறுக்கிறார்கள் ,ஏமாற்றுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள் ,உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் . கடந்த 75 நாட்களாக இவற்றையெல்லாம் எதிர்கொண்ட போதிலும் அவர் இன்னும் தகுதிகள் குறித்து விவாதித்து வருகிறார் . வழக்கமான உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் இவரின் எண்ணங்கள் , திட்டங்களை பார்க்கும்போது இரும்பு மனிதரை போல் உள்ளார் . சிலருக்கு இது சுலபமாக தெரியலாம் . ஆனால் எனக்கு அவரைப் பார்த்து வியப்பாக இருக்கிறது ‘ என்று கூறியுள்ளார்.