Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி … செய்து பாருங்க …!!!

சிறுதானிய கஞ்சி செய்ய தேவையான பொருள்கள் :

குதிரைவாலி, வரகு, சாமை, பாசிப்பருப்பு – தலா 50 கிராம்,
பச்சை மிளகாய்                                                       – 2,
மிளகுத் தூள், உப்பு                                                 – சுவைக்கேற்ப,
கறிவேப்பிலை                                                         – சிறிதளவு,
சின்ன வெங்காயம்                                                 – 10,
நல்லெண்ணெய்                                                      – ஒரு தேக்கரண்டி,
தேங்காய்ப்பால்                                                        – ஒரு கிண்ணம்,
பூண்டு                                                                             – 4 பல்,
சீரகம்                                                                               – அரை தேக்கரண்டி.
செய்முறை : 

முதலில் அனைத்து சிறுதானியங்களையும் கழுவி, சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

அதன் பின் தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில்வைத்து, பாசிப்பருப்பு சேர்த்து, கஞ்சிப் பதம் வரும் வரை வேகவிடவும்.

அடுத்து  கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

பின்பு  தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பின்பு பரிமாறவும்.

Categories

Tech |