ஆரோக்கியமான நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
தேவையான பொருள்கள் :
நெல்லிக்காய் – 20
பெருங்காயம் – கொஞ்சம்
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 5
கடுகு – கொஞ்சம்
உப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான
எண்ணெய் – தேவையான
உளுத்தம் பருப்பு – 3 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் நெல்லிக்காயின் கொட்டையை நீக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நெல்லிக்காயை வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் வறுக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் அரைத்து கடுகு, கொஞ்சம் பெருங்காயம், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு போட்டு தாளித்து கொட்டினால் சுவையான நெல்லிக்காய் துவையல் தயார்.