Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான முருங்கைக்கீரை தண்ணிச்சாறு… செய்து பாருங்கள் …!!!

முருங்கைக்கீரை தண்ணிச்சாறு செய்ய தேவையான பொருள்கள் :

முருங்கைக்கீரை        – 2 கப்
பாசிபருப்பு                      – அரை கப்
வெங்காயம்                   – ஒன்று
தக்காளி                          – ஒன்று
பச்சை மிளகாய்          – 2
மஞ்சள் தூள்                 – கால் தேக்கரண்டி
உப்பு                                  – தேவைக்கேற்ப‌
பெருஞ்சீரகம்               – ஒரு தேக்கரண்டி
பூண்டு                              – 5 பல்
கறிவேப்பிலை            – ஒரு இணுக்கு
தேங்காய்                        – கால் மூடி

செய்முறை :

முதலில் பாசிபருப்பை கழுவி 10 நிமிடம் ஊற‌ வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அதன் பின் வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் ஊற‌ வைத்த‌ பாசிபருப்பை சேர்த்து வதக்கவும். பருப்பு கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்..

அடுத்து பருப்பு நன்கு வெந்த‌ பின்னர் ஆய்ந்த‌ முருங்கைக்கீரையை சேர்த்து 2 நிமிடம் வேக‌வைக்கவும் இதனுடன் அரைத்த‌ தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Categories

Tech |