Categories
மாநில செய்திகள்

ஆரோவில் அறக்கட்டளை பிறப்பித்த உத்தரவு ரத்து…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தி அரவிந்தர் மற்றும் அன்னையால் ஆரம்பிக்கப்பட்டது ஆரோவில் அறக்கட்டளை. அதண் நிர்வாகத்தை கவனிக்க நிர்வாகக் குழு, குடியிருப்பு வாசிகள் சபை, குடியிருப்பு வாசிகள் சபையின் செயற்குழு, சர்வதேச ஆலோசனை கவுன்சில் ஆகிய 4 அமைப்புகள் உள்ளது. இந்த இதில் ஆரோவில் நகர் மேம்பாட்டு கவுன்சில், குடியிருப்பு வாசிகள் சபை ஆகியவற்றின் உறுப்பினர்களை நீக்கிவிட்டு புதிய உறுப்பினர்களை நியமித்து மாற்றி அமைத்து அறக்கட்டளை உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 4 அமைப்புகளையும் மாற்றி அமைத்து அறக்கட்டளை செயலாளர் பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு விரோதமாக உள்ளது என்று கூறி, அந்த உத்தரவுகளை ரத்து செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டுக்கு பின் ஆரோவில் குடியிருப்பு வாசிகள் சபையில் பதிவுகள் புதுப்பிக்கப்படாததால் விரிவான விளம்பரங்களை வெளியிட்டு, பதிவுகளை புதுப்பிக்கும்படி ஆரோவில் அறக்கட்டளை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி அரவிந்தர் மற்றும் அன்னையின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுரை வழங்கினார்.

Categories

Tech |