Categories
சினிமா

“ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை எதிர்த்து ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்”… பிரச்சனையில் சிக்கிய ராஜமௌலி…!!!

ட்விட்டரில் ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தை எதிர்த்து ஹேஸ்டாக் ஒன்று பரவி வருகின்றது.

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்”  திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருக்கின்றார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படமானது கர்நாடகாவில் இல்லாமல் தெலுங்கு மொழியில் அதிக திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். இதனால் கன்னட ரசிகர்கள் டுவிட்டரில் “#BoycottRRRinKarnataka” என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்டாகி   வருகின்றனர். இதுபோலவே தமிழ்நாட்டிலும் அதிக திரையரங்கில் இந்த படம் தெலுங்கில் வெளியாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றது. இத்திரைப்படத்தில் ராஜமௌலி பல பிரமாண்டங்களை நிகழ்த்தி இருப்பதால் ரசிகர்கள் திரைப்படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |