Categories
சினிமா

ஆர்ஆர்ஆர் படம்… “நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் நடிகர்”… வைரலாகும் வீடியோ…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகின்றது.

“ஆர் ஆர் ஆர்”  திரைப்படமானது ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட் படமான இதை லைகா புரொடக்ஷன்ஸ், பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றது. சென்ற வருடமே வெளியாக இருந்த இத்திரைப்படமானது கொரோனா காரணத்தில் வெளியாக இருந்தநிலையில், தற்போது வருகின்ற 25 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கின்றது.

இந்நிலையில் படக்குழு புரமோஷனுக்காக நேற்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது. அப்போது இயக்குனர் எஸ்எஸ்.ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் ஆலியா பட் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கானும்பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் உடன் இணைந்து நடிகர் அமீர்கான் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |