Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்…. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டிஜிபிக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டது . ஆனால் அதற்கு எந்த ஒரு முடிவும் எடுக்காததால் அனுமதி அளிக்கும்படி ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் மற்ற மாநிலங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது,ஆனால் இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று கூறி குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் நடத்த நிபதனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது .மேலும் செப்டம்பர் 28ம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று நிபதனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |