Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகை…. அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மதுரையில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 26ஆம் தேதி வரை பங்கேற்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் வழித்தடங்கள் வரை சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் எந்த விதிகளின்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |