ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஹெபாடிடிஸ் நோய் பரவுவதால் அமெரிக்கா மற்றும் கனடா உணவு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் ‘ஆர்கானிக்’ ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருந்து ஹெபாடிடிஸ் நோய் பரவுகிறது. இது குறித்து அமெரிக்கா மற்றும் கனடா உணவு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாக 17 நபர்களுக்கு மேல் ஹெபாடிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயினால் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து நடந்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஆர்கானிக் ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த அடுத்த கட்ட ஆய்வில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறியதாவது “நீங்கள் எப்போது உங்கள் ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கியுள்ளீர்கள், அல்லது அவற்றை உறைய வைப்பதற்கு முன்பு எங்கிருந்து வாங்கினீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறிந்து விடுங்கள்” என எச்சரித்துள்ளது.