Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆர்கே பாலாஜியின் வீட்ல விசேஷம்”… திரைப்படத்தின் விமர்சனம் இதோ..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் நயன்தாரா, ஊர்வசி போன்றோரும் நடித்திருந்தனர். எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்று வெற்றியடைந்தது.

இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி தற்போது வீட்டில் விசேஷம் எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இந்தியில் ஆயுஷ்மான்  நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பதாய் ஓ படத்தின் தமிழ் ரீமேக்தான் வீட்டில் விசேஷம். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்தது மட்டுமல்லாமல் சரவணன் என்பவருடன் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஆர் ஜே பாலாஜியுடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்தியராஜ் போன்றோரும் நடித்திருக்கின்றனர். இந்தநிலையில் 50 வயதில் தனது அம்மா கர்ப்பமாகிறாள் இந்த செய்தியை குடும்பத்தைச் சார்ந்த வரும் சமூகமும் எப்படி கையாளுகிறது என்பது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை ஆகும்.

குடும்பமாக பார்க்கும் படியாக படத்தை இயக்கி இருக்கின்ற படக்குழுவை பலரும் பாராட்டி வருகின்றனர். என்னதான் ஹிந்தி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற விதமாக பல காட்சிகளை மாற்றி அற்புதமாக எடுத்திருக்கின்றார். ஹீரோவாக ஆர் ஜே பாலாஜி கன கச்சிதமாக நடித்திருக்கிறார். பெயர்போன ஊர்வசி இந்த படத்தில் அம்மாவாக வாழ்ந்து இருக்கின்றார். மேலும் சத்யராஜ் இந்த படத்தில் வழக்கம்போல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். எனவே எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களின் வரிசையில் ஆர் கே பாலாஜி வீட்ல விசேஷம் படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |