ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கம்போல பந்துகளை எதிர்கொண்ட திணறி நின்றார். இந்நிலையில் அவர் 16 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
அடுத்து மொயீன் அலியும் 3(8)பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டம் இழந்ததால் சிஎஸ்கே 150 ரன்களை தொடுவதே பெரிய விஷயமாக இருக்கும் என கருதப்பட்டது. பவர் பிளேயில் 35 ரன்கள் தான் சேர்ந்தது. இந்த சமயம் பார்ட்னர்ஷிப் அமைத்த ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். ஒன்பதாவது அவருக்குப் பிறகு 16-வது ஓவரில் போதுதான் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டை டூபிளஸி கொண்டு வந்தார்.
இரண்டு பேட்ஸ்மேன்களும் செட்டில் ஆனதால், இவரை சுலபமாக எதிர்கொண்டனர். உத்தப்பா ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார். அடுத்து வந்த வேகப்பந்து வீச்சாளர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 216/4 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஒருவர் கூட பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஷாபஸ் அகமது 41 (27), அறிமுக வீரர் பிரபுதேசாய் 34 (18) போன்றவர்கள் ரன்களை சேர்த்தனர். இறுதியில் தினேஷ் கார்த்திக் 34 (14) ஓரளவுக்கு பங்களிப்பு செய்திருந்தார். இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 193/9 ரன்கள் சேர்த்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சிஎஸ்கே இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.