Categories
மாநில செய்திகள்

“ஆர்டர்லிகளை உடனே திரும்பப்பெற வேண்டும்”….. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளதாவது: “உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனே திரும்பப்பெற வேண்டும். ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45 ஆயிரம் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசியல்வாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது. ஆர்டர்லிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |