Categories
மாநில செய்திகள்

“ஆர்டர்லி முறை முறை ஒழிப்பு” தமிழக டி.ஜி.பியின் உத்திரவாதம்…. பாராட்டிய நீதிபதி….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணிக்கவேல் என்ற காவலர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு காவலர் குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்‌. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ள காவலர்களை சொந்த வேலைக்காக பயன்படுத்துவது காவல்துறையின் பெயரை கெடுத்து விடும் என்றார். அதன் பிறகு வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் ஒட்டப்படும் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் ஒட்டப்படும் அரசு முத்திரை போன்றவைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி கூறினார். தமிழக உள்துறை முதன்மை செயலாளர் ஆர்டர்லிகளை  வைத்திருக்கக் கூடாது என்று டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் டிஜிபி சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இன்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆர்டர்லி முறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு நீதிபதி காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிடவில்லை எனவும், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே நல்லெண்ணத்துடன் ஆர்டர்லிகளை பயன்படுத்தாமல் இருக்கின்றனர் எனவும் கூறினார். அதன் பிறகு அனைவருக்குமே ஒரு உதவியாளர் தேவை. ஆனால் மக்களின் வரிப்பணம் வீணாவது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இந்த ஆர்டர்லி முறைகளால் சில நன்மைகள் கிடைப்பதால் புகார்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தாலும் அவர்களை அமுக்கி புகார்களை மறைத்து விடுகின்றனர் என்றும் வேதனை தெரிவித்தார்.

இதற்கு அரசு தரப்பு ஆடர்லி முறைகளை ஒழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் வழக்கறிஞர் மற்றும் காவலர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தடுக்க முடிகிறது என்றனர். இதுவரை ஏராளமான ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டுள்ளது எனவும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு மற்றவர்களும் திரும்ப பெறப்படுவார்கள் என்றும் ஒரு உயர் காவல் அதிகாரியின் வீட்டில் 5 காவலர்கள் பணியமர்த்தப்படுவதால் மாதம் 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது எனவும் கூறப்பட்டது.

இதற்கு நீதிபதி ஐபிஎஸ் அதிகாரிகள் காவலர்களை அரசு பணி தவிர மற்ற பணிகளுக்கு பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளித்துள்ளதாகவும், அனைத்து அதிகாரிகளின் சார்பில் டிஜிபி உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் கூறினார். இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. மேலும் பயிற்சி பெற்ற காவலர்களை சொந்தக் காரணத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் தேவைப்பட்டால் ஒரு பணியாளரை நியமித்துக் கொள்ளலாம் என்றும் கூறி வழக்கை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Categories

Tech |