தன் மகள் சித்ராவின் தற்கொலைக்கு என்ன தான் காரணம் என்று ஆர்டிஓ விசாரணையில் கூறியிருப்பதாக சித்ராவின் தாய் தெரிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சித்ராவின் பெற்றோரிடம் ஆர்டிஓ விசாரணை நடத்தியது.
அதன்பிறகு ஓட்டல் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவரிடம் விசாரணை நடந்தது. ஏற்கனவே ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருவதால், அவரிடம் இன்று தீவிர விசாரணை நடத்தினர்.இந்நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம். ஆர்டிஓ விசாரணையில் அனைத்து விபரங்களையும் கூறியுள்ளோம் என்று சித்ராவின் தாய் விஜயா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். எனக்கும் எனது மகளுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மரணத்திற்கு முன் எனது மகள் என்னிடம் தான் பேசினார் என்று விளக்கமளித்துள்ளார்.