Categories
உலக செய்திகள்

ஆர்டெமிஸ்1 திட்டம்… புதிய தேதி உறுதிப்படுத்தப்படவில்லை… நாசா அறிவிப்பு…!!!!!

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களின் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்ப இருக்கின்றது. ஆர்டெமிஸ் 1 எனும் ஆளில்லா விண்கல சோதனையை கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று  செய்ய நாசா செய்ய திட்டமிட்டுள்ளது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்டவுன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக நாசா அறிவித்திருந்தது.

மேலும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கடற்கரைகளில் கூடியிருந்த மக்கள் வரலாற்று சிறப்புமிக்க ஆர்டெமிஸ் 1 விண்ணில் ஏவப்படுவதை காண ஆவலுடன் திரண்டு இருந்தனர். ஆனால் ஏவுவதற்கு முன் அதில் ஹைட்ரஜன் நிரப்பும் பணி நடைபெற்று உள்ளது. அப்போது பல்வேறு இடங்களில் கசிவுகளை கண்டறிந்துள்ளனர். அதனை சரி செய்வதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் முழுமையாக சரி செய்ய முடியவில்லை ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியுள்ளது. அதனால் இந்த இரண்டாவது முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது. அதன் பின் சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆய்வு அமைப்புகள் மேம்பாடு இணை நிர்வாகி ஜிம் ப்ரீ பேசும்போது செப்டம்பர் ஐந்து ஆறு எழுவதற்கு காலநிலை சரியாக இருக்கிறது. ஆனால் அதற்குள் விண்கலத்தில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய முடியாது இன்னும் புதிய தேதியை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஏவுதல் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் நாலு வரை அல்லது அக்டோபர் 17 முதல் 31 வரை உள்ள காலகட்டத்தில் நடைபெறலாம்.

ராக்கெட் தற்போது அதன் கட்டுமான தளத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படும் அங்கு இந்த விண்கலத்தின் சிக்கலை தீர்ப்பதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது. இவை எல்லாம் சரி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் நிலவுக்கு அனுப்பப்படும் என நாசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாசா நிர்வாகி பில் நெல்சன் பேசும்போது அடுத்த மாத தொடக்கத்தில் ஒரு குழுவினர் கென்னடி விண்வெளி மையத்தை பயன்படுத்தி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றார்கள். இதனால் அடுத்த முயற்சி அக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை தள்ளி வைக்க வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய விண்வெளி வீரர் விக்டர் குளோவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இவை உண்மையில் நம்ப முடியாத சிக்கலான இயந்திரங்கள் நீங்கள் அவற்றில் ஏதேனும் ஒரு பாதிப்பை பார்க்கும்போது நம்பிக்கையை பெற வேண்டும் அதற்கு மாறாக நம்பிக்கை இழக்கக்கூடாது. அதனால் இந்த வகையான கசிவு ஏற்பட்ட பின் இந்த திட்டம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது ஒரு சரியான முடிவு என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |