Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்…. திடீர் சாலை மறியலால் பரபரப்பு…. 60 பேர் கைது….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில்  சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஏ.ஐ.யு.டி.யு.சி, அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி கொண்டு தேனி பழைய பேருந்து நிலையம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் ஊர்வலத்திற்கு காவல்துறையினர் மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுரை செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் உட்பட 60 பேரை காவல்துறையினர் கைது செய்து தேனியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |