கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், சாலக்குடி ஆற்றில் பாய்கிறது. மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
Categories