தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அருவி, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், 300 அடியில் இருந்து விழும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, காட்சி முனை போன்ற பகுதிகளுக்கு சென்று இயற்கை அழைகை கண்டு ரசித்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்வதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரப்பளீஸ்வரர் கோவில் அருகே வாகனங்களை நிறுத்த உதவியாக உரிய இடம் ஒதுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.