அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். வழக்கமாக ஜூன் மாதத்தில் குற்றாலத்தில் சீசன் துவங்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்கிறது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனை அறிந்த உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.