அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று சாரல் மழையுடன், குளுமையான காற்று வீசியது. இந்த சீசனை அனுபவிக்க நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்தனர்.
இந்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் திரண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.