Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 நாட்கள் தடை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளை வேடிக்கை பார்த்து சென்றனர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மேல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

இதனால் அந்த அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து குளுமையான சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Categories

Tech |