அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி கொடுத்த பிறகு நிறைய புது படங்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அரண்மனை-3 திரைப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது.
இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.