நடிகர் ஆர்யா தன் பிறந்தநாளை ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த படத்திற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுவதுமாக மாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்நிலையில் இன்று ஆர்யாவின் 40வது பிறந்தநாளை ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.
Thank u so much brother 😘😘🤗 https://t.co/E4misGmJyT
— Arya (@arya_offl) December 11, 2020
படக்குழுவினர் பாக்ஸிங் ரிங் போன்ற கேக்கை ஆர்யாவுக்கு கொடுத்துள்ளனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆர்யாவுக்கு திரையுலகினர் ,ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.