அயோத்திய திரைப்பட விழாவில் மகாமுனி படத்திற்கு ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடித்த மகாமுனி படத்தை சாந்தகுமார் என்று இயக்குனர் இயக்கினார். இதில் ஆர்யாவுடன் இந்துஜா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் தங்களின் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த திரைப்படத்தினை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்தார். பெற்றோர் செய்யும் தீமையும், நன்மையும் பிள்ளைகளையே சேரும் என்ற கதைக் கருவை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஆர்யா மகாராஜன், முனிராஜன் என்று பெயர் கொண்டு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
Very happy to have won the "Best Actor" award for "Magamuni" in the 15th Anniversary of “Ayodhya Film festival” Thank you so much @Santhakumar_Dir sir 🤗🤗🤗😘😘 @MusicThaman @StudioGreen2 @kegvraja pic.twitter.com/shWNnUwHsi
— Arya (@arya_offl) December 5, 2021
வெவ்வேறு கோணத்தில் வாழும் ஒத்த உருவம் கொண்ட இரட்டையர்களின் பிரச்சனையை கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா சிறப்பான நடிப்பை வெளியிட்டிருந்த இந்த படம் வெளியான போது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. அந்த வகையில் 15வது அயோக்கிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.