இந்த வருடம் 16 லட்சம் மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந்து இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பம் ஆனது. இந்த வருடம் மாணவர்களை பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அரசு பள்ளியில் அதிகமாக சேர்த்து வருகின்றனர். 3,08,000 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலும், 3,66,000 மாணவர்கள் ஆறாம் வகுப்பிலும், 1,04,000 மாணவர்கள் ஒன்பதாவது வகுப்பிலும், 4,14,000 மாணவர்கள் பதினோராம் வகுப்பிலும் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருடம் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 16 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதில் பதினோராம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பில் அதிக அளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளதால் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் ஆர்வத்துடன் சேர்த்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.