சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 40 லிருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்கள் 6 சதவீதம் பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மொத்த மக்கள் தொகையில் 5-ல் இருந்து 5.5 சதவீதம் பேர் போட்டுள்ளனர்.
தற்போது பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் 9 ஆயிரத்திற்கு மேல் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளன. இருப்பு உள்ள இந்த தடுப்பூசிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போடும் அளவிற்கு உள்ளது. மேலும் 12 ஆயிரம் தடுப்பூசிகள் இன்றோ அல்லது நாளையோ வரவுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.