ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம், ரணம், ரௌத்திரம்) படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை டிவிவி தானய்யா தயாரிக்கிறார்.
Ramaraju & Bheem ❤️🔥🌊 #RRRMovie pic.twitter.com/5vrM662iGo
— RRR Movie (@RRRMovie) June 29, 2021
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் முக்கிய அட்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டு பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாகவும், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இரண்டு மொழிகளுக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டனர் என்றும் விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்துவிடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .