ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து மூன்று பாடல்கள் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.