ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். மேலும் வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது.
The First Song from #RRRMovie on August 1st, 11 AM.🤝#Dosti #Natpu #Priyam 🔥🌊
An @mmkeeravaani Musical.🎵
🎤@itsvedhem @anirudhofficial @ItsAmitTrivedi @IAMVIJAYYESUDAS #YazinNizar@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @DVVMovies @LahariMusic @TSeries pic.twitter.com/dyBaFxQPxt
— RRR Movie (@RRRMovie) July 27, 2021
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் பாடல் வருகிற ஆகஸ்டு 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடலை ஐந்து மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடியிருக்கின்றனர். அதன்படி தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் விஜய் யேசுதாஸும், ஹிந்தியில் அமித் திரிவேதியும், தெலுங்கில் ஹேமச்சந்திராவும், கன்னடத்திலும் யசின் நசிரும் பாடியுள்ளனர். இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.